தேவையான பொருட்கள்
நறுக்கிய காளான் 1/2 கப்
வெங்காயம் நறுக்கியது - 1
தக்காளி நறுக்கியது - 1
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் 1டீஸ்பூன்
பச்சை மிளகாய் -2 கீறியது
இஞ்சி,பூண்டு விழுது - 2டீஸ்பூன்
வர மிளகாய் விழுது -1 டீஸ்பூன்
நல்லெண்ணய் - தேவைக்கு ஏற்ப
கருவேப்பிலை -1 இணுக்கு
நறுக்கிய கொத்தமலலி - 2 டீஸ்பூன்
அரைக்க -- 1
சின்ன வெங்காயம் -5
தக்காளி -1
சோம்பு -1/2 டீஸ்பூன்
பட்டை 1 துண்டு
கிராம்பு - 2
சீரகம் - 1/4 டீஸ்பூன்
ஏலக்காய் -1
மேற்கூறிய அனைத்தையும் வதக்கி அரைக்கவும்.
அரைக்க -- 2
தேங்காய் - 1/2 துண்டு / 1/4 கப் துறுவியது
முந்திரி - 6 எண்
சோம்பு 1/4 டீஸ்பூன்
அனைத்தையும் மைய அரைக்கவும்
செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
நன்கு வதங்கியதும் அரைத்த விழுது -1 மற்றும் வரமிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் நறுக்கிய காளான் சேர்க்கவும். 5 நிமிடம் கழித்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
சால்னா கொதித்து வரும் நிலையில் தீயைக் குறைத்து ,அரைத்த விழுது -2 ஐ சேர்த்து குறைந்த தணலில் வேகவிடவும்.
சால்னா தயாரானதும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து பறிமாறவும்.