தேவையான பொருட்கள்
கொள்ளு - 100கிராம்
சின்ன வெங்காயம் -100கிராம்
தக்காளி -1
சீரகம் -1டீஸ்பூன்
வரமிளகாய் -10
பூண்டு - 6 பல்
பெருங்காயம் - சிறிய கட்டி
உப்பு - தேவைக்கேற்ப
கருவேப்பிலை - 2 இணுக்கு
புளி - சிறிய எலுமிச்சை அளவு
நல்லெண்ணய் 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் கொள்ளை கல் நீக்கி குக்கரில் வேகவைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், சின்ன வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை, தக்காளி, புளி, பூண்டு,பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
வேகவைத்த கொள்ளில் உள்ள தண்ணீரை வடிகட்டி அத்துடன் வதக்கிய பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் கர கர வென அரைக்கவும்.
சுவையான கொள்ளு மசியல் ரெடி.
கடைசியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து கிளறி பரிமாறவும்
No comments:
Post a Comment